இந்திய ராணுவத்தில் 'ஜூனியர் கமிஷன் ஆபீசர்' (மத பண்டிதர்) பணிக்கு தகுதியான ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய ராணுவத்தில் 'ஆர்ஆர்டி-70' பயிற்சி திட்டத்தின்படி ரிலிஜியஸ் டீச்சர் பணிக்கு பண்டிட், கிரந்தி, மவுலவி ஆகிய பிரிவுகளில் மத பண்டிதர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களின் பணி ஜூனியர் கமிஷன் ஆபீசர் தகுதிக்கு சமமாகும்.
பணி: ஜூனியர் கமிஷன்ட் ஆபீசர் (ரிலிஜியஸ் டீச்சர்):- 36 இடங்கள்.
தகுதி: ஏதேனும் ஒரு பட்டம். கூடுதலாக சமஸ்கிருதத்தில் மத்யம் அல்லது இந்தியில் பாஷன் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். இளங்கலை சமஸ்கிருதம் அல்லது இந்தி முடித்திருந்து, மத்யம், பாஷன் முடிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது: 25 வயது முதல் 35க்குள். சம்பளம் ரூ.34,800. மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு எம்ப்ளாய்மென்ட் நியூஸ் ஜூன் 23-29 தேதியிட்ட இதழ் அல்லது www.joinindianarmy.nic.in இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசிநாள்: ஜூலை 19