Showing posts with label Health. Show all posts
Showing posts with label Health. Show all posts

Baba Farid University of Health Sciences Admission to Master of Physiotherapy and M.Sc. Courses

Admission to Master of Physiotherapy (MPT) and M.Sc. (Anatomy), M.Sc. (Physiology) & M.Sc. (Biochemistry) – Session 2011For M.Sc. courses: The above course will be open to those candidates who have passed B.Sc Course taking Medical Anatomy, Physiology and Biochemistry as their subjects with 50% or above marks from recognized Institutions.

For MPT Course:

Candidates should have obtained B.P.T. from a recognized institution. First preference will be given to the bonafide residents of the State of Punjab.

The candidates from other states shall also be taken, if Punjab candidates are not available.

The admission will be made on the basis of merit of aggregate marks in BPT examination.


View the original article here

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் வெண்டைக்காய்!

வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளைக்கு போஷாக்கு என்று இந்தியர்களுக்கு தீவிர நம்பிக்கை. இது பருத்திச் செடியின் குடும்பத்தை சேர்ந்தது. தாவரவியல்படி செம்பருத்தி ஹாலிஹாக் என்னும் பூச்செடி வகை. இந்த பூக்களின் அமைப்பும் வெண்டைக்காய் பூவின் அமைப்பும் ஒரே மாதிரியானவை. வெண்டைக்காய்க்கு வெப்பம் அதிகமுள்ள நிலமும் பகல் இரவு இரண்டிலும் சூடான சூழ்நிலையும் அவசியம். இதனால் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் விளைச்சல் அதிகம்.

வெண்டைக்காய் வரலாறு:

வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா நாடு. அங்கிருந்து அரேபியா, நைல்நதியோர நாடுகள், பிறகு இந்தியா என்று அடுத்தடுத்து அறிமுகமாகி இருக்கிறது. கி.பி 1600-களில் அடிமை வியாபாரம் தொடங்கிய காலகட்டத்தில் ஆப்ரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர். ஆப்ரிக்கர்கள் கம்போ என்ற ஒரு பிரபல சூப் தயாரிக்கையில் சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். வெண்டைக்காயை பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்ரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். ஓக்ரா என்ற இன்னொரு பெயரும் உண்டு. இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும் நீளமாகவும் நுனி கூராகவும் இருப்பதால் ஆங்கிலத்தில் இதை பெண்ணின் விரல் (Ladies finger) என்கிறார்கள்.

வெகுநாட்கள் வரை வெண்டைக்காய் எப்படி சமைப்பது என்று தெரியாமலே யாரும் பயன்படுத்தவில்லை. அந்த காலத்தில் விவசாயிகளும் இதை செடியிலேயே முற்ற விட்டதால் அதை பயன்படுத்திய ஒருசிலரும் முற்றிய வெண்டைக்காயின் ருசி பிடிக்காமல் அதை வெறுத்தனர்.

வெண்டைக்காய் வகைகள்:

இளம் பச்சை, கரும் பச்சை, சிவப்பு நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை வடிவங்கள் உண்டு.

வெண்டைக்காய் விசேஷ குணம்:

வெண்டையின் மிக முக்கியமான விசேஷ குணம் கொழகொழப்புதான். இதிலுள்ள Acetylated Galeturomic அமிலங்கள் கொழகொழப்பை ஏற்படுத்துகின்றன. வெண்டைக்காயை நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வந்து கொழகொழக்கிறது.

வெண்டைக்காய் வாங்குவது எப்படி?:

இளசாக இருக்கும் போதே பறித்துவிட வேண்டும். பயிரிடுவோர் தினமும் அறுவடை செய்ய வேண்டும். பறித்த பிறகுகூட முற்றிவிடும் வகையை சேர்ந்தது. சீக்கிரமே மரம் போல் முற்றி விடும். வாங்கியவுடன் சமைக்க வேண்டும். வெண்டைக்காயினுள் புழு இருக்கலாம். காம்புக்கு அருகில் ஓட்டை இல்லாததாக பார்த்து வாங்க வேண்டும். ஓட்டை இருந்தால் புழு இருக்கும்.

வெண்டைக்காய் பாதுகாப்பு:

ஃப்ரிஜ்ஜில் வைப்பதானால் கழுவாமல், லூஸாக பிளாஸ்டிக் பையில் போட்டு காய்கறி ட்ரேயில் வைக்கவும். ஃப்ரிஜ்ஜில் வைக்கும்போது துளி கூட ஈரம் இருக்கக் கூடாது. ஈரம் இருந்தால் வெண்டைக்காய் அழுகி கொசகொசத்து பூசணம் பூத்துவிடும். சமைப்பதற்கு முன்தான் அலம்ப வேண்டும். சில வகை வெண்டைக்காயில் மெல்லிய பூனைமுடி போல இருக்கும். நன்றாக தேய்த்துக் கழுவி பேப்பர் டவலில் துடைத்துவிட்டு நறுக்கவும். நறுக்கி தண்ணீரில் போடக்கூடாது. அதிலிருக்கும் ஒருவித சளி போன்ற கொழ கொழப்பான திரவம் வெளியேறி சமையலே கெட்டு விடும்.

வெண்டைக்காய் சமைக்கும் போது கவனிக்க:

இன்று வெண்டைக்காய் சாம்பார் இல்லாத வீடுகளே இல்லை என்று கூறலாம். சூப், ஊறுகாய், குழம்பு என்று வெண்டைக்காயை வைத்து செய்யப்படும் உணவு வகைகளின் பட்டியல் மிகப் பெரியது. வெண்டைக்காயை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி, வெயிலில் காய வைத்து, எண்ணெயில் பொறித்து வடகமாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

வெண்டைக்காயின் கொண்டைப்பகுதியை வெட்டி தோசை மாவு அரைக்கும்போது சேர்த்தால் தோசை மிருதுவாக வரும்.
வெண்டைக்காயை துண்டாக வெட்டி நறுக்கும் போது அதிலிருக்கும் கொழ கொழப்பு மொத்தையாக்கி சரியாக வதங்காது. அதனால் கொழகொழப்பு நீங்க எலுமிச்சை சாறு, அல்லது தயிரை சிறிதளவு விட்டு வதக்கலாம்.

மிக மிக பொடியாக வெட்டி நறுக்கினாலும் கொழ கொழப்பு அவ்வளவாக இருக்காது. வெண்டைக்காயை தக்காளி, வெங்காயம், சோளம், மீன், உருளைக்கிழங்கு ஆகியவற்றுடன் சேர்த்து சமைக்கும்போது அவை மிகவும் ருசியாக இருக்கும்.

மற்ற காய்கறிகளோடு சேர்த்து சமைக்கும் போது வெண்டைக்காயை அதன் கொழகொழப்பு வராமல் தனியாக வதக்கி கடைசியில் சேர்க்க வேண்டும். இரும்பு, அலுமினிய பாத்திரங்களில் சமைத்தால் கறுத்துவிடும். தக்காளியின் புளிப்புத் தன்மை வெண்டைக்காயின் கொழகொழப்பை முறியடிக்கும்.

வெளிநாட்டில் வெண்டைக்காயை மெலிதாக நறுக்கி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றோடு சேர்த்து ஸாலட்டாகத்தான் சாப்பிடுவார்கள். தனியாக சமைத்து சாப்பிடுவதில்லை. வங்காளத்தில் முற்றிய வெண்டையை உறித்து கொட்டையை சாப்பிடுவார்கள்.

இளசான வெண்டைக்காயை துண்டாக்கி முட்டையில் தோய்த்து ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து சாப்பிடுவது அமெரிக்காவில் பிரபலம். முற்றிய காயை பேப்பர் செய்யவும் கயிறு செய்யவும் பயன்படுத்துகிறார்கள்.
உணவுச் சத்து:

பாதி கரையும் நார்ச்சத்து, பாதி கரையாத நார்ச்சத்துக்கள் இதில் உள்ளன. கரையும் நார்ச்சத்து உடலிலுள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது. கரையாத நார்ச்சத்து குடலுக்கு திடத்தை கொடுத்து குடல் அழற்சி, குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

ஒரு கப் சமைத்த வெண்டைக்காயில் இருக்கும் உணவுச் சத்துகளின் அளவு:

கலோரி 25, நார்ச்சத்து - 2 கிராம், புரோட்டின் 1.52 கிராம், கார்போஹைட்ரேட் 5.76 கிராம், விட்டமின் ஏ 460 IU, விட்டமின் சி 13.04 மில்லி கிராம், ஃபாலிக் ஆசிட் - 36.5 மைக்ரோ கிராம், கால்சியம் 50.4 மில்லி கிராம், இரும்புச் சத்து 0.4 மில்லி கிராம், பொட்டாசியம் 256.6 மில்லி கிராம், மெக்னீசியம் - 46 மில்லி கிராம்.

வெண்டைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் இளம் பெண்களுக்கு ஆப்பிள் பழம் போல அழகிய கன்னங்கள் உண்டாகும். மேலும், புஷ்டியான முகத்துடன் பளபளவென்று மின்னுவார்கள்.

வெண்டைக்காய் வேரை இடித்துப் பொடியாக்கி அதை இரவு உணவிற்குப் பின் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். 

10 கிராம் பொடியை 10 கிராம் அளவுள்ள நெய் மற்றும் தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்குத் தாது பலம் ஏற்படும்.

வெண்டைக்காயில் ஏ, பி மற்றும் சி ஆகிய வைட்டமின்கள் இருக்கின்றன. குடல் புண்ணால் ஏற்படும் வயிற்று வலிக்கு வெண்டைக்காய் ஒரு சிறந்த மருந்து. பண்டைய காலத்தில் லேசான காயம், நீர்க்கட்டு, பரு போன்ற பிரச்சினைகளுக்கு வெண்டைக்காய்ச் செடியின் இலைகளை அரைத்து மருந்தாகப் பயன்படுத்தினர்.

வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும் தன்மையும் வெண்டைக்காய்க்கு உண்டு. சீசனில் விலை குறைவாக இருக்கும்போது நிறைய வெண்டைக்காயை வாங்கி, காய வைத்து தேவைப்படும்போது சூப் தயாரித்துக் குடித்து மகிழலாம். வீட்டிலேயே சிறிய தோட்டம் அமைத்து இயற்கை முறையில் வெண்டைக்காயைப் பயிரிட்டால் அதன் சுவை அதிகமாக இருக்கும். இத்தனை மகிமை வாய்ந்த வெண்டைக்காயை அளவோடு சாப்பிட்டு வந்தால் வளமாக வாழலாம்.                        

பெண்களின் கண்ணீர் அவர்களை பாதுகாக்கிறது: ஆராய்ச்சியில் தகவல்

பெண்கள் தங்களது அழுகையினால் காரியம் சாதிக்க கூடியவர்கள் என்று கூறப்படுவதுண்டு. ஒருவரின் காதலியோ அல்லது மனைவியோ அழும்போது அதனை அவரால் தாங்கி கொள்ள முடிவதில்லை. எவ்வளவு கல் நெஞ்சு படைத்தவராக இருந்தாலும் அவரையும் கரையச்செய்து விடும் பெண்களின் அழுகை. இதற்கு அறிவியல் ஆய்வின் அடிப்படையில் விளக்கம் பெறும்போது, பெண்களின் கண்ணீரில் ஒரு வித வேதிபொருள் காணப்படுகிறது. அது அவர்களை பார்க்கும்போது களையிழந்து காணப்படுவது போல் தோன்ற செய்கிறது. அழும் பெண்ணின் முகம் இந்த வேதிபொருளால் பொலிவு இழப்பதால் அவரது துணை அதனை பார்ப்பதற்கு விரும்புவதில்லை. மேலும் கண்ணீரில் காணப்படும் வேதிபொருள் அவர்களை மறைமுகமாக பாதுகாக்கிறது. எவ்வாறென்றால் அழுவதை பார்க்கும் ஆண்களில் வன்முறையை தூண்டும் டெஸ்டோஸ்டீரான் அளவை அது வெகுவாக குறைக்கிறது எனவும் ஆய்வு தெரிவிக்கிறது

வேப்ப இலை மகத்துவம் | Benefit's of Neem Leaves |

 வேப்ப எண்ணையுடன் தூய தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணையை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்தால், பூச்சிகள் மற்றும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம். மேலும், இந்த கலவை தோல் எரிச்சல், சிறு வெட்டுக்காயங்கள், தீக்காயங்கள் ஆகியவற்றையும் குணப்படுத்துகிறது.

 வேப்ப இலைகளால் தயாரிக்கப்பட்ட தேனீரைப் பருகும்போது, தோலுக்கு பாதுகாப்பும், உறுதியும் கிடைக்கும்.

 வேப்ப எண்ணையுடன், தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் ஆயிலை கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்து வந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் நீங்கி, ஆரோக்கியமான பளபளப்பான தலைமுடியை பெறலாம்.

 300 மில்லி நீருடன் 2 முதல் 3 வேப்ப இலைகளை சேர்த்து, கொதிக்க வைத்து ஆறவிடவும். இந்த வேப்ப இலை கஷாயத்துடன், சிறிதளவு தேன் கலந்து பருகி வர, தொண்டைப் புண் குணமாகும்.


 வேப்ப இலையை உலரவைத்து பொடியாக்கி, சிறிதளவு நீர் கலந்து பசையாக்கி முகத்தில் தடவி வர, பருக்கள் மற்றும் கொப்புளங்கள் நீங்கி முகம் பளிச்சிடும்.

 வேப்ப எண்ணையை, காலை, மாலை இருவேளைகளிலும் 2 துளிகள் மூக்கில் இட்டு வர சைனஸ் தொல்லை விலகும்.

 கொசு உற்பத்தியாகும் இடங்களில் வேப்ப விதை மற்றும் வேப்ப எண்ணையை தெளித்து வர, கொசுத்தொல்லை நீங்கி சுகாதாரமாக இருக்கலாம்.

 250 மில்லி அளவுள்ளநீரில், 40 முதல் 50 வேப்ப இலைகளைப் போட்டு 20 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு ஆறவைத்து வடிகட்டி குடிக்க, உடலில் உள்ள தசைகள் மற்றும் திசுக்கள் பலம்பெறுகின்றன.

 2 அல்லது 3 வேப்ப இலைகளை தினமும் மென்று வர, ரத்தம் சுத்திகரிக்கப்படுவதுடன், அஜீரணக்கோளாறும் சரியாகும்.

 வலி நிவாரணியாகவும், உடல் சூட்டை தணிக்கும் சிறந்த மருந்தாகவும் இது பயன்படுகிறது.

பேரீத்தையும் அதன் சிறப்பும் | Importance of Dates |

இறைவனின் கொடையான பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம்.  பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.  அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.

இது மிகவும் சத்துள்ள பழமாகும்.  குழந்தைகள் முதல் பெரியவர்கள்  வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம்.  இது ஆப்பிரிக்கா, அரபு நாடுகளில் மட்டுமே அதிகம் விளைகின்றது.

வெப்பம் அதிகமுள்ள பாலைவனப் பகுதிகள் இதன் வளர்ச்சிக்கு ஏற்றதாகும்.  இதற்கேற்ற தட்ப வெப்ப நிலை நம் நாட்டில் இல்லாததால் இங்கு விளைவதில்லை.  இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து  இறக்குமதி செய்யப்படுகிறது.

பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும்.

அரபு மக்களின் உணவுப் பொருட்களில் இதுவே முக்கிய இடம் பெறுகின்றது.

ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது.   சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம்.  இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.

Tamil                 - Perecham pazham
English               - Date palm
Malayalam         - Ita pazham
Sanskrit             - Kharjurah
Telugu               - Ita
Botanical Name - Phoenix dactylifera

இதன் காய் கர்ச்சூரக்காய் என்று வழங்கப் படுகின்றது.

பேரீந்தெனுங்கனிக்குப் பித்தமத மூர்ச்சை சுரம்
நீரார்ந்த ஐயம் நெடுந்தாகம் - பேரா
இரத்தபித்த நீரழிவி லைப்பறும் அரோசி
உரத்த மலக் கட்டுமறும் ஓது.
        - அகத்தியர் குணபாடம்

கண்பார்வை தெளிவடைய

பொதுவாக நம் இந்திய குழந்தைகளில் 42 சதவீதம் பேர் கண் பார்வை கோளாறுகளால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும்.  இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும்.  மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும்.  இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

மெலிந்த குழந்தைகளுக்கு

சில குழந்தைகள் எதைச் சாப்பிட்டாலும் உடல் பெருக்காமல் மெலிந்தே காணப்படுவார்கள்.  பள்ளிக்குச் சென்று வந்தவுடன் கால் முட்டிகளில் வலி ஏற்படுவதாகச் சொல்வார்கள். எவ்வளவுதான் மருந்துகள் கொடுத்தாலும் இவர்கள் தேறாமல் இருப்பார்கள்.    இதை ஆங்கில மருத்துவரிடம் காண்பித்தால் சாதாரண வலி என்று கூறுவார்கள்.  ஆனால் சித்த மருத்துவர்கள் இப்படிப்பட்ட பிரச்சனை ஏற்பட ஈரல் பாதிப்பு ஒரு காரணம் என்கின்றனர்.

வர்ம பரிகார நூல்கள் கூட கால்சியம் சத்து குறைவால் ஈரல் பாதிப்பு ஏற்படும் என்கிறது.   இந்த பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு பேரீச்சம் பழத்தை தேனுடன் ஊறவைத்து காலை மாலை என இருவேளையும் கொடுத்து வந்தால்  குழந்தையின் உடல் தேறி, வலுவுடனும், புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.

பெண்களுக்கு

பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை.  மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன.  இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது.  மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும்.  அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும்.   இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

சளி இருமலுக்கு

பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும்.  நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும்.  இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை.  இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்க

அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள்.  இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும்.  கைகால் தளர்ச்சி குணமாகும்.

பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.

* எலும்புகளை பலப்படுத்தும்.

* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.

* முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது.  அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.

* புண்கள் ஆறும்.  மூட்டு வலி நீங்கும்.

* பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.

மாலை நேரத்தில் கண்பார்வைக் குறைபாடு கொண்டவர்களை கப உடம்பு சூலை நோய் என்பார்கள்.  சளியானது கண்ணில் படிந்து மாலைக்கண் நோய் ஏற்படச் செய்கின்றது.  இதற்கு தினமும் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிடுவது சாலச் சிறந்தது.

சருமத்தை அழகாக பாதுகாப்பது எப்படி | How to take care about the Dry Skin |

வீட்டிலேயே கிடைக்கக் கூடிய பொருட்களைக் கொண்டு நம் வறண்ட சருமத்தை அழகாக பாதுகாப்பது எப்படி என்று பார்ப்போம்.

வறண்ட சருமம்:

முகத்தில் பாலைத் தடவி, சிறிது நேரம் கழித்துக் கழுவலாம். அல்லது வீட்டில் பன்னீர் இருந்தால் பால் ஏட்டையும் பன்னீரையும் கலந்து முகத்தில் தேய்த்து பதினைந்து நிமிஷங்கள் ஊறவைத்துப் பின் கழுவினால் முகம் ப்ரஷ்ஷாக இருக்கும்.

தேன், கிளிசரின் இவையெல்லாம் நல்ல மாய்ச்சரைசர், இவற்றில் ஏதாவது ஒன்றைக் கூட உபயோகித்து லேசாக முகத்தில் வட்டமாக மசாஜ் செய்வதுபோலத் தடவி ஊறவைத்துப் பின் கழுவவும். தேனைப் போடும் பொழுது புருவம், கண்கள், கண்களைச் சுற்றியுள்ள இடங்களைத் தவிர்க்கவும்.

பயத்த மாவுடன் தேனும், பன்னீரும் கலந்து முகத்திற்குப் பேக் போட்டு ஊறவைத்துக் கழுவலாம். தேன் உபயோகிக்கும் பொழுது சுத்தமானதாக இருப்பது நல்லது. கசகசாவை வெந்நீரில் இரவில் ஊறவைத்துவிட வேண்டும். அதைக் காலையில் அரைத்து முகம், கழுத்து போன்ற இடங்களில் தேய்த்து அரைமணிநேரம் ஊறவிட வேண்டும். பின் குளிர்ந்த நீரில் கழுவவும். இப்படி வாரம் இரண்டு மூன்று முறை செய்தால் வறண்ட சருமம் நார்மலாகிவிடும்.

பொதுவாக ஃபேஸ் பேக் போடும்போது கண், கண்களைச் சுற்றிய இடங்களைத் தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால் கண்களைச் சுற்றியுள்ள தோல் இறுக்கமாகிவிடும். இவற்றைத் தவிர வறண்ட சருமத்திற்குச் சில பழங்களும் பயன்படுகின்றது. அவற்றைப் பற்றி கீழே பார்க்கலாம்.

வறண்ட சருமத்திற்குப் பயன்படும் பழங்கள்:

சாதாரணமாக நாம் சாப்பிடும் மஞ்சள் வாழைப்பழத்தை நன்றாகக் கூழாக்க வேண்டும். இதில் பொட்டாசியம் சத்து அதிகம் இருக்கிறது. இத்துடன் தேன் கலந்து முகத்திலும், கழுத்திலும் பேக் போடவேண்டும். வெறும் அரை வாழைப்பழத்திற்கு 2 டீ ஸ்பூன் தேன் சேர்ப்பது போதுமானது. இந்த பேக்கை 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறவைத்துப் பின் முகம் கழுவினால் சருமத்திற்கு நல்ல நரிஷ்மெண்ட் கிடைக்கும்.

'அவகாடோ' என்று ஒரு பழம் இருக்கிறது. பெரிய கடைகளில் கிடைக்கும். இதை பட்டர் ஃப்ரூட் என்போம். இதன் விலையும் மலிவுதான். வெளியில் பச்சை நிறமாகவும் உள்ளே வெண்ணெய் போலவும் இருக்கும். இந்த வெண்ணெய் மாதிரி இருக்கும் கூழை எடுத்து முகத்தில் தேய்த்துக் கழுவவும். இந்தப் பழதை உபயோகித்துத்தான் அழகு நிலையங்களில் ஸ்பெஷல் ஃபேஷியல் செய்யப்படுகிறது. இது உலர் சருமத்திற்கு மிகவும் உகந்தது.

பேரீச்சம்பழம், பாதாம் பருப்பு இவைகளைக்கூட முகத்தில் தடவ உபயோகிக்கலாம். இவற்றை முதல் நாள் இரவே ஊற வைத்துவிட வேண்டும். உடனடியாக முகத்திற்குப் போட வேண்டுமென நினைத்தால் வெந்நீரில் ஊறவைக்க வேண்டும். இவற்றை நன்றாக அரைத்துப் பால் அல்லது பால் பவுடர் கலந்து முகத்தில் ஊறவைக்கவும். 15 நிமிடம் முதல் அரைமணி நேரம் வரை ஊற வைத்துக் கழுவலாம்.

ஒரு முட்டையை உடைத்துப் பால் சிறிதளவு, ரோஜா ஆயில், அல்லது லாவண்டர் ஆயில் (கடைகளில் கிடைக்கும்) இரண்டு அல்லது மூன்று சொட்டுக்கள் சேர்த்து முகத்தில் தடவவும். பத்து நிமிடம் கழித்து முகத்தைக் குளிர்ந்த நீரில் கழுவினால் உலர் சருமத்திற்கான ஊட்டச்சத்து முட்டையின் மூலம் கிடைக்கும். முட்டை உபயோகிக்க முடியாதவர்கள் புரொட்டீன் கலந்த பொடியை உபயோகிக்கலாம். லெஸிதின் பவுடர் என்று புரொட்டீன் பவுடர் மருந்துக் கடைகளில் கிடைக்கும். அவற்றில் இரண்டு ஸ்பூன் எடுத்துப் பால் கலந்து முகத்தில் தடவிக் கழுவினால் வறண்ட சருமம் நார்மலாகும். இதை ஒரு நாள்விட்டு ஒரு நாள் செய்து வந்தால் இயற்கையிலேயே அழகாகி விடுவீர்கள். இவற்றில் ரசாயனக்கலவை எதுவும் இல்லாததால் துணிந்து பயன்படுத்தலாம்.

பொதுவாக உலர் சருமம் உடையவர்கள் குளிர்ந்த நீரில், சாதாரண நீரில் முகம் கழுவுதல் நல்லது. முகத்துக்குப் பேக் போட, காய்ச்சிய பாலைப் பயன்படுத்த வேண்டும்

ஏன் இத்தனை பரபரப்பு? | Why is this Tension & Show Off |

தினசரி காலை வீட்டை விட்டு வெளியே வந்து பாருங்கள். எங்கு பார்த்தாலும் பரபரவென்று மக்கள் அங்கும் இங்குமாக போய்க்கொண்டே இருப்பார்கள். அவர்கள் எதைத் தேடி செல்கிறார்கள்? எதை நோக்கி இந்தப் பயணம்? கொஞ்சம் ரிலாக்சாக பார்ப்போம்.

இந்த பரபரப்பு பெரும்பாலும், பணம் சம்பாதிப்பதற்காகத்தான் இருக்கும். இதை தவிர தற்காலிக மகிழ்ச்சி இரண்டாம் இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. பொழுதுபோக்கின் உச்சகட்டம் என்று துள்ளிக் கொண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பொழுதைக் கழிக்க போட்டி போடுகின்றனர். அதனால் தான்...திரையரங்குகள், பூங்காக்கள், கடற்கரைகள், திருவிழாக்கள் என்று மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. விடுமுறை நாட்களில் கிராமங்களில் உள்ளவர்கள் நகரத்தில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கும், நகரத்தில் உள்ளவர்கள் கிராமத்தில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கும் செல்கின்றனர். அங்கும் சென்று குறிப்பிட்ட நாள்களுக்கு மேல் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஏதாவது ஒரு பிரச்சினையை உருவாக்கி விடுகின்றனர்.  தொழிலதிபர்கள், நடிகர்கள் எல்லாம் மனதை ரிலாக்ஸ் செய்ய வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றனர். ஆனால், எல்லா இடங்களுக்கும் சென்று மீண்டும் பழைய இடத்திற்கே வந்து பணிகளைத் தொடங்கும் போது எரிச்சல் தான் வருகிறது. விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு, ``ஏன் தான் லீவு முடிஞ்சுதோ? இன்னும் கொஞ்ச நாள் லீவு விட்டு இருக்கக் கூடாதா?'' என்று எரிச்சல்.

இளைஞர்கள் இப்போதெல்லாம் எதையாவது வித்தியாசமாக செய்யவேண்டும் என்று நினைத்துக் கொண்டு ரிஸ்க் எடுத்து வருகின்றனர். ``மற்றவர்கள் முன்னிலையில் நான் யார் ? எனது திறமை எப்படிப்பட்டது என்பதைக் காட்ட வேண்டும்'' என்பதற்காக, தேவையற்ற முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். உதாரணமாக, நீர்த்தேக்கங்களில் உயரமான இடத்திலிருந்து டைவ் அடித்து குதிப்பது, நீச்சல் தெரியாத நண்பனை ஆழத்திற்கு கூட்டிச் செல்வது, வேகமாக பைக்கை வளைத்து வளைத்து ஓட்டிச் செல்வது என்று சாகசங்களை செய்கின்றனர். இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுகள், உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடுகிறது.

எல்லாவற்றையும் அனுபவித்தவுடன், ஒருகட்டத்தில் வாழ்க்கையில் ஒரு சலிப்பு வந்து விடுகிறது. சலிப்பு இல்லாமல் வாழ்வது தான் வாழ்க்கை. சலிப்பு இல்லாமல் வாழ வேண்டும் என்றால், நாம் எதை நோக்கி பயணிக்கிறோம் என்பது முதலில் நமக்கு புரிய வேண்டும். புரிந்து பயணித்தால் வாழ்க்கை புதுமையானதாய் இன்பம் நிறைந்ததாய் 
இருக்கும்.



ஆல்ஃபா நிலை மைண்ட்பவர் | The Alpha Mind Power

ஆல்ஃபா நிலையில் ஒரு இலட்சியத்தை ஆழ்மனத்தில் பதித்தால் அது நம் வாழ்க்கையில் சுலபமாக நிறைவேறும் என்பதை பார்த்தோம். அந்தக் காட்சியை சரியான முறையில் அமைப்பது மிகவும் முக்கியம். அது எப்படி என்பதை பார்ப்போம்.

 

நமது மூளையின் ஆல்ஃபா நிலை என்பது மிக அற்புதமான, சுகமான நிலையாகும். மூனையின் வேகம் வினாடிக்கு 7லிருந்து 14 வரை இருக்கும் நிலை ஆல்ஃபா நிலை. நாம் சற்று அமைதியாக இருக்கும் நிலை இது. தியானத்தின் மூலம் இந்த நிலையை அடைகிறோம். இதற்கு பயிற்சி தேவை. ஆல்ஃபா நிலையை நாம் அடைந்தவுடன் நமக்குள் இருக்கும் ஆழ்மனம் திறக்கிறது. அங்கிருக்கும் வியக்கத்தக்க சக்தியை அந்த நேரத்தில் நாம் பயன்படுத்த முடிகிறது.

 

நமது இலட்சியங்களை ஆல்ஃபா நிலையில் மனத்திரையில் ஒரு காட்சியாகப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும் காட்சி, ஆழ்மனத்தில் பதிந்து அங்கிருந்து பிரபஞ்ச சக்திக்கே ஒரு செய்தியாகப் போய் சேர்ந்துவிடுகிறது. பிரபஞ்ச சக்தி பல விதத்தில் செயல்பட்டு நமது இலட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கிறது. தகுந்த சூழ் நிலைகளை நமது வாழ்க்கையில் உருவாக்கி, தகுந்த மனிதர்களைச் சந்திக்க செய்து அந்த இலட்சியம் நிறைவேற வழி வகுக்கிறது.

 

இப்படி ஆல்ஃபா நிலையில், இலட்சியத்தை ஆழ்மனத்தில் பதிக்கும் பொழுது, நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களில் மிக முக்கியமானது அந்தக் காட்சிகளின் அமைப்புதான். இலட்சியத்தை மனத் திரையில் உருவாக்கும் பொழுது அந்த இலட்சியம் நிறைவேறிவிட்ட காட்சியை மட்டும் கண்டால் போதும். இதை எப்படி அடையப்போகிறோம், வழிமுறைகள் என்ன, என்பதைப் பற்றி தியானத்தில் யோசிக்க வேண்டாம். வழிமுறைகளை யோசிக்கும் பொழுது நமது மனம் பல இடங்களில் செயல்பட முடியாமல் தடுமாறும்.

 

சுரேந்திரனின் அனுபவத்தைப் பார்ப்போம். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஒருமுறை என்னைச் சந்தித்து தன் பிரச்னையைப் பற்றிச் சொன்னார்.

"குடும்பத்தில் செலவு மிகவும் அதிகமாகிவிட்டது. என்னால் சமாளிக்க முடியவில்லை. எப்படியாவது எனக்கு பிரமோஷன் கிடைத்து சம்பளம் உயர வேண்டும் என்று பல மாதங்களாக ஆல்ஃபா தியானம் செய்து வருகிறேன். ஆனால், இதுவரை நடக்கவில்லை. என்ன செய்வது?'

"சரி. உங்கள் நிறுவனத்தின் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன?'

 

"அதுதான் மேடம் பிரச்னை. எனக்கு மேல் உயர் பதவி எதுவும் இல்லை. எம்.டி. தான் இருக்கிறார். இருந்தாலும் வேறு எப்படி தியானம் செய்வது என்று எனக்கு புரியவில்லை. அதனால்தான் இந்த வழிமுறையை யோசித்தேன்.'

 

"நீங்கள் இந்த பிரமோஷன் என்கின்ற வழிமுறையை விட்டுவிட்டு குடும்ப வருமானம் பெருகுவது போல் பார்த்து வாருங்கள். நிச்சயம் நடக்கும்.' என்றேன்.

 

நாமாக யோசிக்கும் பொழுது நமது இலட்சியம் நிறைவேற ஏதேனும் ஒருவழிதான் நமக்கு புலப்படும். ஆனால் வழிமுறைகளை பிரபஞ்சத்திடம் விட்டுவிட்டோமானால் நம் கண்ணுக்குத் தெரியாத பல கதவுகள் திறக்கும். பல வழிகள் பிறக்கும்.

 

நான் சொன்னபடி சுரேந்திரன், தியானம் செய்து வந்தார். சில மாதங்கள் கழித்து சுரேந்திரன் தன் மனைவியுடன் என்னை சந்திக்க வந்தார். இருவர் முகத்திலும் பிரகாசமான புன்னகை.

 

"நீங்கள் சொன்னபடி இருவருமே தியானம் செய்து வந்தோம். அதன் பிறகு என் மனைவி செய்த சில கைவினைப் பொருட்கள், ஒரு கண்காட்சியில் வைத்து விற்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்று அதுவே அவளுக்கு மிகப் பெரிய ஒரு தொழிலாக அமைந்துவிட்டது. இன்று அதன் மூலம் எங்களது குடும்ப வருமானம் பெருகி மிகவும் சௌகரியமாக இருக்கிறோம்.'

 

இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்கும். பிரபஞ்ச சக்தி ஒரு தாய் போன்றது. நமக்கு என்ன வேண்டும் என்பதை ஒரு குழந்தையைப் போல் காண்பித்தால் போதும். அந்தத் தாய் அதை நிச்சயம் நிறைவேற்றிக் கொடுப்பாள். வழிமுறைகளை நாம் தியானத்தில் செல்லும் பொழுது பல சமயம் அது நமக்கு சரியான வழியாக இல்லாமல் போகலாம்.

 

அப்பொழுது பிரபஞ்ச சக்தியால் கூட நமது இலட்சியத்தை நிறைவேற்ற முடியாமல் போகலாம். அதனால்தான் இலட்சியம் நிறைவேறும் காட்சியை மட்டும் காண வேண்டும். எந்த நிபந்தனைகளும் இன்றிக் காண வேண்டும். அப்படிச் செய்தால் நமது இலட்சியங்கள் ஒவ்வொன்றாக நாம் நினைத்ததைவிட மிகவும் சுலபமாக நடைபெறுவதை நாம் காண முடியும்.

 

பிரபஞ்ச சக்தி நமக்கு எல்லா வளங்களையும் கொடுக்கத் தயாராக இருக்கிறது. அவற்றை குறைவின்றிப் பெற்றுக் கொள்ள நாம் தான் தயாராக வேண்டும்.